சுதந்திர தினவிழாவை நேரில் காண கடிதம் எழுதிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘லவ் யூ தாத்தா’ என நன்றி தெரிவித்தான்

சென்னை: நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுவதை நேரில் காண வேண்டும் என கடந்த 3ம் தேதி ராமநாதபுரம் கமுதி தாலுகா பாப்பனம் கிராமத்தை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் விதர்சன் (8), தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இதனையடுத்து இக்கடிதம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 14ம் தேதி இரவு தனது தாயார் ஆனந்த வள்ளியுடன் சிறுவன் விதர்சன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.

பின்னர், நேற்றைய தினம் சுதந்திர தின விழா நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டு விழாவினை விதர்சன் கண்டு களித்தார். 77 வருட சுதந்திர தின விழாவில் முதல் முறையாக கடிதம் மூலமாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு அதனை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு சிறுவனின் ஆசையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறுவன் விதர்சன் குறித்து வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறுவன் லிதர்சன் பேசுகையில்: முதல்வரின் அழைப்பில் பேரில் நேரில் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ‘‘என் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஐயாவுக்கு நன்றி. லவ் யூ தாத்தா’’ என அதில் தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர தினவிழாவை நேரில் காண கடிதம் எழுதிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘லவ் யூ தாத்தா’ என நன்றி தெரிவித்தான் appeared first on Dinakaran.

Related Stories: