வங்கதேசத்தில் பயங்கரம் ; ஹமூன் சூறாவளியால் கனமழை: 3 பேர் பலி; 100 வீடுகள் சேதம்

டாக்கா: வங்கதேசத்தில் ஹமூன் சூறாவளி காரணமாக கொட்டிய மழையில் 3 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. வங்கக்கடலில் உருவான ‘ஹமூன்’ சூறாவளி, நேற்று தென்கிழக்கு வங்கதேசத்தின் கடற்கரை பகுதியில் கரையை கடந்தது. சுமார் 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் கடந்த இந்த புயலால் வங்கதேசத்தின் கடலோர பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் முகாமும் பலத்த சேதமடைந்தது. சாலைகள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகின. பல இடங்களில் சாலைகள் முடக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அதற்கான பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

The post வங்கதேசத்தில் பயங்கரம் ; ஹமூன் சூறாவளியால் கனமழை: 3 பேர் பலி; 100 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: