396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை,மேனிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்பட சுமார் 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிலரை தேர்வு செய்து நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி அவர் பெயரால் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகள் 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவர்களில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மற்றும் இதர துறையை சேர்ந்த பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் 386 ஆசிரியர்களுக்கும், மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றுவோர்(ஆசிரியர் பயிற்சி பள்ளி) 10 பேர் என மொத்தம் 396 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான விழா, செப்டம்பர் 5ம் தேதி, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், மற்றும் பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்து அதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 3 முதல் 5 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்கம் ரூ.10 ஆயிரம், பதக்கம், மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

The post 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: