தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கு கவுன்சலிங்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் இளங்கலை மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆன்லைன் கவுன்சலிங் நேற்று துவங்கி இன்று வரை நடக்கிறது. இந்த ஆன்லைன் கவுன்சலிங் குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் மொபைல் மற்றும் மின்னஞ்சல்களில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் கவுன்சலிங் காலத்தில் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிப்பு மற்றும் கல்லூரி விருப்பங்களை அவர்கள் விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம். தமிழக அரசின் ஒப்புதலுக்கு பின், தற்காலிகமாக தேர்வு செய்யப்படும் மாணவர்கள், கல்லூரிகளில் சேர்க்கப்படுவர். மேலும், விவரங்களுக்கு 9488635077, 9486425076 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) வெங்கடேச பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கு கவுன்சலிங் appeared first on Dinakaran.

Related Stories: