அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். 6ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளில் 5ம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55கி.மீ வேகத்திலும் இடையிடையே 65கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள்.
The post தமிழ்நாட்டில் 8ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.