×

தமிழ்நாட்டில் ட்ரிபுள் எஞ்சின் அரசு அமையாது; ஒரே எஞ்சின் சர்க்கார்தான் அமையும் : அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை : திராவிடத்தை எதிர்த்துதான் மதுரையில் முருகன் மாநாடு நடைபெற்றது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, “அதிமுகவிற்கு அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியே இல்லாமல் போய்விட்டது. திராவிடத்தை எதிர்த்துதான் மதுரையில் முருகன் மாநாடு நடைபெற்றது. திராவிடத்தை கட்சி பெயரில் வைத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடனாது. முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சித்து குறும்படம் வெளியானபோது அதிமுகவினர் அமைதி காத்தனர். தமிழ்நாட்டில் ட்ரிபுள் எஞ்சின் அரசு அமையாது; ஒரே எஞ்சின் சர்க்கார்தான் அமையும்.

இந்து சமய அறநிலைத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்; சிறுபான்மையினருக்குதான் பாதுகாப்பு தேவை. முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச்செல்ல முடியாது அவர் நம்மோடு இருப்பார். யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு என தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு தெரியும். தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது. சுற்றுச்சூழல்துறை அனுமதி பெற்று விரைவில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ட்ரிபுள் எஞ்சின் அரசு அமையாது; ஒரே எஞ்சின் சர்க்கார்தான் அமையும் : அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ragupathi ,Pudukkottai ,Murugan Conference ,Madura ,Ragupati ,Pudukkota ,Minister of Mineral Resources ,Anna ,Murugan ,Madurai ,engine ,
× RELATED பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில்...