- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- திருவண்ணாமலை
- வடமண்டல திமுக இளைஞர் அணி நிர்வா
- கே. ஸ்டாலின்
- திமுகா
திருவண்ணாமலை: தாழ்ந்த தமிழகமே என்று கவலைப்பட்டதை மாற்றி, தமிழ்நாட்டை திரும்பிப் பாருங்கள் என்ற நிலைக்கு மாற்றி உள்ளோம்’ என திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘திமுக இளைஞரணியினரை பார்க்கும்போது 50 ஆண்டுகள் டைம் டிராவல் மூலம் பின்னால் போனது போல் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயணம் சென்று இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது. புது ரத்தமாக வந்திருக்கக் கூடிய இளைஞரணியை பார்க்கும் போது புது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறக்கிறது’ எனவும் உரையாற்றினார்.
