×

ராமதாஸ் தலைமையில் வரும் 17ம் தேதி பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம்

சென்னை: பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் வரும் 17ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : PMK State Executive Committee ,Ramadoss ,Chennai ,PMK ,President ,Patali Makkal Katchi ,
× RELATED அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள்...