திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தையும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இல்லம் தேடி சென்று கல்வி போதிக்கும் முறையையும் இந்த குழுவினர் பார்வையிட்டனர். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அரவிந்தன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் முகமது சலீம், வட்டார கல்வி அலுவலர்கள் சிவசங்கரன், ஜுலியட், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், ஆன்டனி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருவருள்செல்வி ஆகியோரும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்களும் தமிழக கல்வி முறை குறித்து ஒடிசா மாநில கல்விக் குழுவினருக்கு விளக்கி கூறி செயல்முறை விளக்கம் அளித்தனர். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் ரேகா நமது மாநிலத்தின் உள்ளடங்கிய கல்விமுறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
The post தமிழக கல்வி முறை குறித்து ஒடிசா மாநில கல்வி குழு ஆய்வு appeared first on Dinakaran.