தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 3 கட்ட சரிபார்ப்புகளுக்குப் பின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வரை 9,246 பயனாளிகள் விஸ்வகர்மா திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 313,000 கோடியில் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

The post தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: