முழு முதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் பிறந்த நாள் தான் கணேஷ சதுர்த்தி அல்லது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர்சதுர்த்தி விழா நெருங்கி வருவதால் பல்வேறு ஊர்களில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் அனுமதி பெற்று பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒலிபெருக்கியில் பாடல் ஒலிபரப்ப நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்: டிஜிபி தகவல் appeared first on Dinakaran.