தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27ல் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: