கடந்த சில மாதங்களாக விசைப்படகுகள் கரை திரும்பியதும் கேரள மீனவர்கள் அத்துமீறி தமிழக பகுதியில் நுழைந்து இரவில் மீன்பிடிப்பதாக தூத்துக்குடி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் காலை கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மீன் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
கேரள மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து செல்லும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். உடனடியாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக துறைமுகத்திலேயே நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
The post தமிழக பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் கேரள மீனவர்கள்.. தூத்துக்குடி துறைமுகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்: அரசு தலையிட்டு தீர்வு காண கோரிக்கை!! appeared first on Dinakaran.