புளியம் பூ – 1 கப்,
உளுத்தம் பருப்பு – 50 கிராம்,
கடலைப்பருப்பு – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 10,
புளி – கொட்டைபாக்கு அளவு,
கடுகு – 1 ஸ்பூன்,
உப்பு – சுவைக்கு.
தேங்காய் துருவல் – ½ கப்,
எண்ணெய் – 2 ஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றலை வறுக்கவும். பின்பு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்க்கவும். பின்பு புளியம் பூவை சேர்த்து நன்கு வதக்கவும். சூடு ஆறியதும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான புளியம் பூ துவையல் ரெடி. இது சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
The post புளியம் பூ துவையல் appeared first on Dinakaran.