சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் எவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது!!

சென்னை: சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் எவுவதற்கான கவுன்டவுன் தொடங்கியது. சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலனை வெற்றிகரமாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரானா மற்றும் சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வேளி ஆராய்ச்சி மையத்தில் உள்ளது. இதையடுத்து வரும் சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. ராக்கெட் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ராகெட்டின் உள் சோதனைகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11.50 மணிக்கு ராக்கெட் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கி உள்ளது.

The post சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் எவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: