சென்னை: தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது. இதையடுத்து, 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை www.tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணைய தளங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த முடியாதவர்கள், ‘இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை-15’ என்ற பெயரில் வரைவோலை மூலமாக செலுத்தலாம். மேலும், இதுதொடர்பாக கூடுதல் விவரம் வேண்டுவோர் 9363462070, 9363462042, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
The post மாணவர்கள் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.