உங்கள் இலக்கு சிகரத்தை நோக்கி இருக்க வேண்டும்: மாணவர்களுக்கு, இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை

தாம்பரம்: சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 29வது வருட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா, 26ம் ஆண்டு மேலாண்மைத்துறை தொடக்க விழா,  சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மேலாண்மை துறையின் 16வது ஆண்டு தொடக்க விழா ஆகியவை,  சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சுமார் 2200 முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர். சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமை வகித்தார். கல்வி நிறுவன தலைவர் கலைச்செல்வி லியோமுத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக இறையன்பு ஐஏஎஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ரூ.5 கோடி லியோமுத்து அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்ளுக்கு பரிசுவழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இறையன்பு ஐஏஎஸ் பேசுகையில், ‘‘ஒவ்வொரு மாணவ, மாணவிரும் தங்களை தனித்துவம் வாய்ந்தவர்களாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் இலக்கு சிகரத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்,’’ என்றார்.
விழாவில் தொழில் ஆலோசகர் மற்றும் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்லூரி முதல்வர்கள் பொற்குமரன், பழனிக்குமார், முதலாமாண்டு துறைத்தலைவர் ராமகிருஷ்னன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உங்கள் இலக்கு சிகரத்தை நோக்கி இருக்க வேண்டும்: மாணவர்களுக்கு, இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: