இந்நிலையில் தலைமை செயலாளரின் தலைமையிலான மாநில பதிவுத்துறை தலைவர் அளவிலான குழுவும், செயல்படுத்துவதற்காக பதிவுத்துறை தலைமையிலான திட்ட செயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கென திட்ட ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுக்கவும், திட்ட ஆலோசகர்கள் இருவரை நியமிக்கவும், இத்திட்டத்தின் செயல்திறன், செயல்பாடு மற்றும் பாதுகாப்பு முதலானவற்றைத் தணிக்கை செய்ய 3ம் தரப்பு தணிக்கையாளர்களை அடையாளம் காணவும் பதிவுத்துறை தலைவருக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முழுமையான வன்பொருள், மென்பொருள், பணியமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்டார் 3.0’ திட்டமானது பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post அடுத்த ஆண்டு முதல் ஸ்டார் 3.0 அறிமுகம்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.