இந்த சம்பவம் பற்றி விசாரித்த போலீசார் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்ததை கண்டறிந்தனர். மருத்துவ செலவு மற்றும் மகளின் திருமணத்திற்காக 41 நபர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக ஆசிரியர் தம்பதி கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதில் கடன் கொடுத்த பலரும் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததாலும், சிலர் இழிவாக பேசியதாலும் அவர்கள் மனமுடைந்து இந்த முடிவை எடுத்தாக தெரியவந்தது.
இந்நிலையில், ஆசிரியர் தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 41 நபர்களில் மேலும் பலர் சிக்கக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், கந்துவட்டி நெருக்கடி காரணமாக கடந்த பிப்ரவரி மதமே ஆசிரியர் லிங்கம் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவர் அளித்த வாக்குமூல வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சிவகாசியில் குழந்தையை கொன்று ஆசிரியர் தம்பதி உள்பட 4 பேர் தற்கொலை: ஆசிரியர் அளித்த வாக்குமூல வீடியோ வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.