×

சில்லி பாயின்ட்…

* ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் கால்பந்து போட்டியில் சீனாவுடன் நேற்று மோதிய இந்தியா 1-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இடைவேளையின்போது இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்த நிலையில், 2வது பாதியில் சீனா கோல் மழை பொழிந்தது.
* ஆசிய விளையாட்டு ஆண்கள் வாலிபால் போட்டியில் கம்போடியா அணியுடன் நேற்று மோதிய இந்திய அணி 3-0 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று அசத்தியது.
* ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஆர்.அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ஸ்பின்னர் யஜ்வேந்திர சாஹல் சேர்க்கப்படாதது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறும் சூரியகுமார் யாதவ், அனுபவம் இல்லாத திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கும்போது, சிறப்பாக விளையாடி 50+ சராசரி வைத்துள்ள சாம்சனை புறக்கணிப்பது தேர்வுக் குழுவினரின் பாரபட்சத்தை காட்டுவதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். சாஹல் சேர்க்கப்படாததை புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
* ஆஸி. தொடருக்கான இந்திய அணி (முதல் 2 போட்டி): கே.எல்.ராகுல் (கேப்டன்), கில், ருதுராஜ், ஷ்ரேயாஸ், இஷான், சூரியகுமார், திலக், ஜடேஜா (துணை கேப்டன்), ஷர்துல், அஷ்வின், வாஷிங்டன், பும்ரா, சிராஜ், ஷமி, பிரசித். 3வது போட்டி: ரோகித் (கேப்டன்), கில், கோஹ்லி, ஷ்ரேயாஸ், சூரியகுமார், ராகுல், இஷான், ஹர்திக், ஜடேஜா, ஷர்துல், அக்சர், வாஷிங்டன், குல்தீப், அஷ்வின், பும்ரா, ஷமி, சிராஜ்.
* அபுதாபி டி10 தொடரின் 2021 சீசனில் புனே டெவில்ஸ் அணிக்காக விளையாடிய வங்கதேச ஆல் ரவுண்டர் நசிர் உசேன் உள்பட அந்த அணியின் 8 வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐசிசி ஊழல் தடுப்புக் குழு வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
* மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மதோவா தகுதி பெற்றுள்ளார். 2வது சுற்றில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டுடன் மோதிய வெரோனிகா 6-2, 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 49 நிமிடம் போராடி வென்றார். மற்றொரு 2வது சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-7 (5-7), 7-5, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்டிடம் தோற்று வெளியேறினார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : India ,China ,Asian Sports Tourism Series ,Dinakaran ,
× RELATED சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு