×

சூப்பர்-8 சுற்றின் முதல் பிரிவில் இன்று: இந்தியா – வங்கதேசம் மோதல்

நார்த் சவுண்ட்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர்-8 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. 2வது போட்டியில் வங்கதேசத்தை சந்திக்கும் இந்தியா தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஆப்கான் அணியுடனான போட்டியில் சூரியகுமார் – ஹர்திக் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் சவாலான இலக்கை நிர்ணயித்த இந்திய அணி… பும்ரா, அர்ஷ்தீப், குல்தீப், அக்சர், ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு கை கொடுக்க வெற்றியை வசப்படுத்தியது.

குறிப்பாக, பும்ரா 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். வங்கதேசத்துக்கு எதிராகவும் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி பெறுவதுடன் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் முனைப்புடன் இந்திய வீரர்கள் வரிந்துகட்டுகின்றனர். அதே சமயம், தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கிய வங்கதேசம், வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியில் சிக்கியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்போட்டி ஆன்டிகுவா, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அரங்கில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா: ரோகித் (கேப்டன்), ஹர்திக் (துணை கேப்டன்), அர்ஷ்தீப், பும்ரா, சாஹல், ஷிவம் துபே, ஜடேஜா, ஜெய்ஸ்வால், கோஹ்லி, குல்தீப், சிராஜ், பன்ட், அக்சர், சாம்சன், சூரியகுமார்.

வங்கதேசம்: நஜ்முல் ஷான்டோ (கேப்டன்), டஸ்கின் அகமது, ஜேகர் அலி, லிட்டன் தாஸ், மஹேதி ஹசன், மகமதுல்லா, முஸ்டாபிசுர் ரகுமான், ரிஷத் உசைன், ஷாகிப் அல் ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், சவும்ய சர்கார், தன்விர் இஸ்லாம், டன்ஸித் ஹசன், டன்ஸிம் ஹசன் சாகிப், தவ்ஹித் ஹ்ரிதய்.

The post சூப்பர்-8 சுற்றின் முதல் பிரிவில் இன்று: இந்தியா – வங்கதேசம் மோதல் appeared first on Dinakaran.

Tags : Super-8 round ,India ,Bangladesh ,North Sound ,-8 ,league ,ICC World Cup T20 ,Afghanistan ,Dinakaran ,
× RELATED 8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை...