×

டி20 உலகக்கோப்பை: அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றில் அமெரிக்கா அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் 6வது போட்டி பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்கா அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அமெரிக்கா அணி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே அமெரிக்கா அணி எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ரஸ்ஸல், ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை அள்ளினர். எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கியது. சாய் ஹோப் அமெரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களை தனது பேட்டிங்கால் திணறடித்தார். சாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 39 பந்துக்கு 82 ரன்களை குவித்து அசத்தினார்.

10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 130 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

The post டி20 உலகக்கோப்பை: அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,West Indies ,US ,Barbados ,United States ,Super 8 ,T20 World Cup cricket ,Super 8 round ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை; அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்க அணி!