×

சில்லி பாயின்ட்…

* இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் (நவ. 8-15) விளையாட உள்ளது. இந்த போட்டிகள் டர்பன் (நவ.8), கெபர்ஹா (நவ.10), செஞ்சுரியன் (நவ.13), ஜோகன்னஸ்பர்கில் (நவ.15) நடைபெறும்.

* லண்டனில் நடைபெறும் குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் 6-7 (3-7), 3-6 என்ற நேர் செட்களில் பிரிட்டன் வீரர் ஜேக் டிரேப்பரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

* வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியுடன் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 160 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை 50 ஓவரில் 275/6 (விஷ்மி 44, சமாரி 91, நிலாக்‌ஷிகா 63, அனுஷ்கா 55); வெஸ்ட் இண்டீஸ் 34.5 ஓவரில் 115 ரன் (நேஷன் 46, ஆலியா 27). போட்டியின் சிறந்த வீராங்கனை சச்சினி நிசன்சலா (5.5-1-28-5). தொடரின் சிறந்த வீராங்கனை விஷ்மி குணரத்னே.

* டி காக் அதிரடி
இங்கிலாந்து அணியுடனான சூப்பர்-8 சுற்று 2வது பிரிவு ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க அணி தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். 22 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அவர் 50 ரன் எடுத்தார். செயின்ட் லூசியா, டேரன் சம்மி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் – குயின்டன் டி காக் தொடக்க ஜோடியின் அபார ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 87 ரன் சேர்த்தது. ஹெண்ட்ரிக்ஸ் 19 ரன்னில் வெளியேறினார்.

* உக்ரைன் வெற்றி
யூரோ கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்லோவகியா – உக்ரைன் அணிகள் நேற்று மோதின. டஸ்ஸல்டார்ப் அரங்கில் நடந்த இப்போட்டியில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. ஸ்லோவகியா தரப்பில் ஷ்ரான்ஸ் 17வது நிமிடத்தில் கோல் போட… உக்ரைன் வீரர்கள் ஷபாரென்கோ (54’), யெரம்சுக் (80’) கோல் அடித்து வெற்றிக்கு உதவினர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : South Africa ,Durban ,Kebarha ,Centurion ,Johannesburg ,Dinakaran ,
× RELATED இந்திய பெருங்கடலில்...