ஜனாதிபதி, அமித் ஷாவை சந்தித்தார் சித்தராமையா

புதுடெல்லி: டெல்லி வந்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜனாதிபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கர்நாடக முதல்வராக கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்ற பிறகு, முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார் சித்தராமையா. மாநில அரசின் அன்னபாக்யா திட்டத்துக்கு அரிசி கிடைப்பது பிரச்சினையாகி உள்ள நிலையில் அவர் டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த அவர், பின்னர் அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். அப்போது, ஏழைகளுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் மாநில அரசின் அன்ன பாக்யா திட்டம் குறித்து ஷாவிடம் சித்தராமையா கலந்து பேசியதாக கூறப்படுகிறது. சித்தராமையா உடன் கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் பொது வினியோகம், வீட்டு வசதி, சமூக நலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்களும் சென்றிருந்தனர்.

The post ஜனாதிபதி, அமித் ஷாவை சந்தித்தார் சித்தராமையா appeared first on Dinakaran.

Related Stories: