×

சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா

சண்டிகர்: பஞ்சாபில் சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா தனது எக்ஸ் பதிவில், ‘‘சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்துள்ளார்.

புதிய தலைவருக்கன தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் செயற்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். அவரது தலைமையின் கீழ் நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்கும், பதவிக்காலம் முழுவதும் முழுமனதுடன் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை வழங்கியதற்கும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Shiromani Akali Dal ,president ,Sukhbir Singh Badal ,Chandigarh ,Punjab ,Daljit Singh Seema ,Dinakaran ,
× RELATED அமிர்தசரஸ் பொற்கோயிலில் பரபரப்பு...