×

குஜராத், மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளப்பெருக்கு

கொல்கத்தா: மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், சண்டிகர், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் கனமழையால் குஜராத்தின் ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், சூரத் மற்றும் படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சிக்கி தவிக்கும் மக்களுக்கு மீட்புப்படையினர் உதவி செய்து வருகின்றனர். அங்கு கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கார்பட்டா தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. வெள்ளம் பாய்ந்தோடியதில், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மரங்கள், மின் கம்பங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்கான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

The post குஜராத், மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,West Bengal ,Kolkata ,Maharashtra ,Haryana ,Punjab ,Chandigarh ,Delhi ,Himachal Pradesh ,Uttar Pradesh ,East Rajasthan ,Jammu and ,Kashmir ,Ladakh ,Junagadh ,Dwarka ,Porbandar ,Rajkot ,Bhavnagar ,Kutch ,Gandhi Nagar ,Surat ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...