×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் குண்டாசில் கைது: கமிஷனர் நடவடிக்கை

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் உட்பட 23 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 5ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான நாட்களில் கொலை, கஞ்சா விற்பனை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் உட்பட 23 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக திருமங்கலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த நரசிம்மன் (22), திருமங்கலம் பாடி குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் (24), திருவான்மியூர் பகுதியில் கவுதம் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கொட்டிவாக்கம் இலங்கை நகரை சேர்ந்த குணசேகரன் (46), கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்த சதீஷ்ராஜ் (31), அண்ணாநகர் பகுதியில் அடிதடி வழக்கில் தொடர்புடைய அண்ணாநகர் அன்னை சத்யா நகர் 2வது தெவை சேர்ந்த ஜோசப் (24), கஞ்சா விற்பனை செய்ததாக ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (26), மணிகண்டன் (22), அரும்பாக்கம் பகுதியில் குற்றங்களில் ஈடுபடும் வகையில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ரவுடி சங்கர் (38), சேத்துப்பட்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட அகிலன் (எ) வெள்ளையங்கிரி (27), அண்ணாசாலை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) மணி (28), புழல் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக புழல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த விஜய் (29), புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (எ) பால் மோகன் (21), புளியந்தோப்பு குருசாமி நகர் 5வது தெருவை சேர்ந்த ராம்கி (எ) ராம்குமார் (32), அரும்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுதாகர் (36), அரும்பாக்கம் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த பாஸ்கர் (34), அமைந்தகரை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக அயனாவரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) அப்பு (எ) ஆன்ட்ரூஸ் (34), திருவல்லிக்கேணி பகுதியில் சிவா என்பவரை கொலை செய்த வழக்கில் பல்லவன் சாலையை சேர்ந்த அப்புராஜ் (35), டி.பி.சத்திரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட அயனாவரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (29), ஓட்டேரி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (38), புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த சூர்யா (28), கிண்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த என்.சூர்யா (24), மடிப்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கீழ்க்கட்டளை காந்தி நகரை சேர்ந்த பப்லு (எ) சண்முகம் (37), குமரன் (35) ஆகிய 23 பேரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

The post தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் குண்டாசில் கைது: கமிஷனர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Guntazil ,Chennai ,Chennai Metropolitan Police ,Arun ,
× RELATED சென்னையில் உள்ள காவல் நிலையங்களில்...