×

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக ஐடி விங் மாநில நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக ஐடி விங்க் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் ஐடி விங் அணி சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதிமுக தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் ராஜ் சத்தியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் இன்றும் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டங்களில், அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயல்பாடுகள், வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிறுத்தி ஆற்ற வேண்டிய களப்பணி, கருத்து பரிமாற்றம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 2 நாளுக்கு முன் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அதிமுக தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்க்) அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

The post மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக ஐடி விங் மாநில நிர்வாகிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : AIADMK IT Wing State Executives ,District Secretaries’ ,Chennai ,AIADMK District Secretaries’ ,Wing ,MGR Mansion ,AIADMK ,Royapettah, Chennai ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்