செபி தலைவராக துஹின் காந்தா பொறுப்பேற்பு

மும்பை: செபியின் தலைவராக மாதபி புரி புச் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பதவியேற்றார். அவரது மூன்றாண்டு பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில் செபியின் புதிய தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு ஒன்றிய நிதித்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே வியாழனன்று நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செபியின் புதிய தலைவராக துஹின் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

துஹின் பதவியேற்பின்போது மாதபி புரி புச் பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லாததால் அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. செபியின் 4 நிரந்தர உறுப்பினர்கள் அஸ்வினி பாட்டியா, அமர்ஜித் சிங், அனந்த் நாராயணன் மற்றும் கம்லேஷ் வார்ஷ்னே ஆகியோர் செபியின் தலைமையகத்தில் துஹினை வரவேற்றனர். மூன்று ஆண்டுகளுக்கு துஹின் செபியின் தலைவராக இருப்பார்.

The post செபி தலைவராக துஹின் காந்தா பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: