இந்த நிலையில், அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை சாலை நடுவே நடமாடியதால், யானையைக் கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர். வாகனங்களை வழிமறித்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள் ஏதாவது உள்ளதா என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி தீவனம் தேடி அலைந்தது. இந்த காட்சியை அவ்வழியே சென்ற அரசு பேருந்தில் இருந்த பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் வாகனங்களை வழி மறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The post சத்தியமங்கலம் வனச்சாலையில் வாகனங்களை வழிமறித்து தீவனம் தேடிய காட்டு யானை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.