செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், உதவி ஆய்வாளர் பணி காலியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பணி காலியிடங்கள் 615. ஜூன் மாத இறுதியில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டாம் நிலை காவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023. இப்போட்டித் தேர்வுக்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும்.
வயது வரம்பு 1.7.2023 அன்றைய தேதியில் பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் /பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள மற்றும் விண்ணப்பிக்க www.tnusrb.tn.gov.in இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த போட்டித்தேர்வுக்கான உடற்தகுதி உயரம் பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ஆண்கள் 170 செ.மீ, பெண்கள் 159 செ.மீ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆண்கள் 167 செ.மீ மற்றும் பெண்கள் 157 செ.மீ இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாகபோட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 31.5.2023 முதல் நடக்கிறது.
The post 615 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.