ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஷிவேலுச் எரிமலை வெடித்தது

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஷிவேலுச் எரிமலை வெடித்தது. ரஷ்யா நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை காலை 7.10 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 18 மைல் ஆழத்தில் தாக்கியது. இதன் விளைவாக பெட்ரோபாவ்லோவ்ஸ்க் -கம்சாட்ஸ்கி நகரில் உள்ள கட்டிடங்களில் “கடுமையாக குலுங்கியது.

இந்த நிலநடுக்கமானது மற்றுமொரு வலுவான நிலநடுக்கத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 9.0 ரிக்டர் அளவுடன் “24 மணி நேரத்திற்குள்” இரண்டாவது நிலநடுக்கம் வரக்கூடும் என்று எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷிவேலுச் எரிமலையில் இருந்து தடிமனான சாம்பல் வெளியேறி வருகிற ப்ளூம் கிழக்கு-தென்-கிழக்காக சுமார் 930 மைல்கள் (1,500 கிமீ) வரை நீண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில், பசிபிக் பகுதி வட அமெரிக்கா மற்றும் யூரேசியா தட்டுகளைப் பொறுத்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்வதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.

The post ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஷிவேலுச் எரிமலை வெடித்தது appeared first on Dinakaran.

Related Stories: