×

நில மோசடி வழக்கு ஈடி விசாரணையை மீண்டும் தவிர்த்தார் ராபர்ட் வதேரா

புதுடெல்லி: ராஜஸ்தானின் பிகானரில் நடந்த நில ஒப்பந்தத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஆயுத ஆலோசகர் சஞ்சய் பண்டாரி தொடர்பான பணமோசடி வழக்கில் அவரை ஆஜராகும்படி ஜூன் 10ஆம் தேதி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று ஆஜராக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றதால் நேற்றும் ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை.

The post நில மோசடி வழக்கு ஈடி விசாரணையை மீண்டும் தவிர்த்தார் ராபர்ட் வதேரா appeared first on Dinakaran.

Tags : Robert Vadra ,ED ,New Delhi ,Enforcement Directorate ,Congress ,General Secretary ,Priyanka Gandhi ,Bikaner, Rajasthan ,UK ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...