இதுதொடர்பாக 4 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (32), திருச்சியை சேர்ந்த சித்திக் அலி (24) ஆகியோரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும் இரண்டு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுத்தகவல் வெளியானது. இந்த வழிப்பறி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது திருவெறும்பூரைச்சேர்ந்த அலெக்ஸ்(35). இவருக்கு தெரிந்த நண்பர் அந்த வங்கியில் பணியாற்றி வருகிறார். அவரிடம் அதிகமான பணத்தை எப்போது எடுத்துச் செல்வீர்கள், அந்த பணத்தை கொள்ளையடித்து பங்கு போட்டு கொள்ளலாம் என்று அலெக்ஸ் கூறி உள்ளார்.
அதன்படி பணம் எடுத்து செல்லும் தகவலை சொல்லி கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டு பங்கு போட்டு பிரித்துள்ளனர். இந்த பணத்தை பெற்று கொண்ட அலெக்ஸ், இன்னொருவரின் மனைவியை, அந்த பெண்ணின் கணவருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு அவருடன் கேரளாவுக்கு இன்பசுற்றுலா சென்றுள்ளார். அலெக்ஸ் மீது கொலை, வழிப்பறி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், சித்திக் அலி மீது 6க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.
The post ரூ.12 லட்சம் கொள்ளை பணத்தில் பங்கு பிரிப்பு அடுத்தவர் மனைவியை அபகரித்து இன்ப சுற்றுலா சென்ற கொள்ளையன் appeared first on Dinakaran.