×

சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட 3பேர் பலி

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். குமரியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரமுள்ள புளிய மரத்தில் மோதியதில் குமரி மாவட்டம் தெற்கு கிரிவளைபகுதியைச் சேர்ந்த கந்தசாமி(50) பாலபிரபு (35), கவிகா(3) ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த கௌரி(27) பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பாடாலூர் காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

The post சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட 3பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Trichi-Chennai National Highway ,Batalur district ,Perambalur ,Chennai ,Kumari ,Kumari district ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...