ஆர்.கே.பேட்டை அருகே சுடுகாடு ஆக்கிரமித்த பகுதிகளை வருவாய்த்துறையினர் ஆய்வு

பள்ளிப்பட்டு: சுடுகாட்டு நிலம் ஆக்கிரமித்த பகுதிகளை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே வெள்ளாத்தூர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராமத்திற்கு சொந்தமான சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து பயிர் சாகுபடிசெய்து வருவதாக கிராம மக்களின் நீண்டகாலமாக புகார் உள்ளது. சுடுகாடு ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வே செய்து மீட்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆர்.கே.பேட்டை வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தாசில்தார் விஜயர்குமார் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் கல்லீஸ், சர்வேயர் லோகேஷ் ஆகியோர் நேற்று வெள்ளாத்தூர் காலனி சுடுகாடு பகுதியில் சர்வே செய்து சுடுகாடு ஆக்கிரமிப்பு அடையாளம் காணப்பட்டது. தற்போது பயிர்சாகுபடி செய்வதால், அறுவடை முடிந்த பின்னர் சுடுகாடு சுற்றி தடுப்பு வேலி அமைக்க ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அனுமதிக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் துரை, சமூக ஆர்வலர் சாமுவேல் கிராம மக்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே சுடுகாடு ஆக்கிரமித்த பகுதிகளை வருவாய்த்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: