பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: தமிழ்நாடு அனைத்து அக்குபஞ்சர் மற்றும் மாற்று முறை மருத்துவர்கள் சங்க அறக்கட்டளை தலைவர் முகம்மது சபீர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘போலீசார் மற்றும் அலோபதி மருத்துவர்கள் எங்களுக்கு இடையூறாக உள்ளனர். எங்களின் பணியில் தலையிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அக்குபஞ்சர் மருத்துவ முறை அங்கீகரிக்கப்பட்டாலும், இதுவரை எந்தவித வழிகாட்டுதல்களும் இல்லை. எனவே, தன்னிச்சையாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்க்க அனுமதிக்க முடியாது. பதிவுபெற்ற மருத்துவர்களால் மட்டும் அக்குபஞ்சர் சிகிச்சை வழங்குவதையும், தன்னிச்சையாக யாரும் கிளினிக் வைக்கவில்லை என்பதையும் அரசுத் தரப்பில் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் முறையான கல்லூரிகளில் மட்டும் அக்குபஞ்சர் மற்றும் மாற்றுமுறை படிப்புகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். என உத்தரவிட்டுள்ளார்.

The post பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: