×
Saravana Stores

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவரை உயர் பதவியில் நியமிக்காமல் எடப்பாடி பழனிசாமி தடுத்தார்: ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு:
2017-ஆம் ஆண்டு தமிழக காவல்துறைக்கு புதிய டிஜிபி நியமிக்கப்பட இருந்தார். அந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர் கே.பி.மகேந்திரன். அப்போது தமிழ்நாட்டில் பணியில் இருந்த அதிகாரிகளில் அவர்தான் மூத்தவர். அதிக அனுபவம் பெற்றவர். மிகவும் நேர்மையானவர். யாருக்கும் அடிபணியாதவர்.

அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் பணிக்காலம் இருந்தது. ஆனால், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை டிஜிபியாக நியமிக்க மறுத்து விட்டார். மாறாக, 2017-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ஓய்வு பெற இருந்த டி.கே.ராஜேந்திரன் என்ற அதிகாரியை அவர் ஓய்வு பெறுவதற்கு அரை மணி நேரம் முன்பாக நள்ளிரவில் நியமித்தனர். காரணம் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறை தலைமை இயக்குனராக வந்து விடக் கூடாது என்பது நோக்கம். இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

The post வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவரை உயர் பதவியில் நியமிக்காமல் எடப்பாடி பழனிசாமி தடுத்தார்: ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Vanniya ,Ramadas Bagheer ,CHENNAI ,Bamaka ,Ramadoss ,DGP ,Tamil Nadu Police ,KP ,Mahendran ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக...