×

வளி மண்டல சுழற்சி: தமிழ்நாட்டில் 9ம் தேதி வரை மழை பெய்யும்


சென்னை: தமிழகத்தில் 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதை அடுத்து, பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 90 டிகிரி அளவில் வெப்பநிலை இருந்தது. இதற்கிடையே, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கபை் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

7ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 8ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 9ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

அதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 90 டிகிரி வரை இருக்கும். மேலும், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் 7ம் தேதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும், 8ம் தேதியில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசும். அதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வளி மண்டல சுழற்சி: தமிழ்நாட்டில் 9ம் தேதி வரை மழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Tenkasi ,Thoothukudi ,Tirunelveli ,Ravi ,
× RELATED மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ...