×

முதல்வர் திறனாய்வு தேர்வு: இன்று ரிசல்ட்


சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1 படிக்கும் மாணவர்களின் திறன்களை கண்டறியும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடந்தது. இதில் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப் படிப்புவரை மாதம் ரூ1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ10 ஆயிரம் வழங்கப்படும்.

இந்நிலையில், திறன் தேர்வுக்கான முடிவுகளை இன்று வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், ஊக்கத் தொகைக்கான தேர்வுப்பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

The post முதல்வர் திறனாய்வு தேர்வு: இன்று ரிசல்ட் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Directorate of Government Examinations ,
× RELATED தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு...