பதற்றம் நீடிப்பதால் எல்லையில் விழிப்புடன் இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

புதுடெல்லி: 2023ம் ஆண்டுக்கான ராணுவ தளபதிகள் காணொலி மாநாட்டில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பே அரசின் முக்கிய முன்னுரிமை. வடகிழக்கு பகுதிகளில் சீன ராணுவம் குவிக்கப்படுவதால், உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லையில் பணியாற்றும் ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் சிறந்த ஆயுதங்கள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதே அரசின் முக்கிய பணி. ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பயங்கரவாத செயல்கள் குறைந்துள்ளன. எனினும் அமைதியை விரும்பும் அரசின் முயற்சிகளுக்கு சவால் விடும் தேசவிரோத சக்திகளுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நாட்டின் உளவுத்துறையை மிகவும் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு ராணுவ வீரரின் நலன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்ப நலன் அரசின் முக்கிய குறிக்கோள் என்றார்.

The post பதற்றம் நீடிப்பதால் எல்லையில் விழிப்புடன் இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: