ராஜஸ்தானில் மேலும் ஒரு மாணவி தற்கொலை… நடப்பு ஆண்டில் இதுவரை 25 மாணவர்களின் உயிரை பலி வாங்கிய நீட் தேர்வு..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்த உத்திர பிரதேச மாநிலம் மஹூ நகரை சேர்ந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோட்டா நகரம் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் பெரிய வணிக மையமாக மாறி வருகிறது. இந்த வணிகத்தில் 10 கோடி ரூபாய் அளவிற்கு புழங்குவதாக கூறப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்த உடனேயே கோட்டா நகருக்கு வந்து நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து விடுகின்றனர். கடந்த செப்டம்பர் 13 அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து கோட்டாவில் தங்கி படித்த 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஒரு வார கால இடைவெளியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டுமே 25 மாணவர்கள் பேட்டி தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

The post ராஜஸ்தானில் மேலும் ஒரு மாணவி தற்கொலை… நடப்பு ஆண்டில் இதுவரை 25 மாணவர்களின் உயிரை பலி வாங்கிய நீட் தேர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: