இந்நிலையில் ஏலகிரி மலையில் பருவமழை காரணமாக சமீபமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம் இரவும் ஏலகிரி மலையில் கனமழை பெய்தது. இதனால் நேற்று அதிகாலை ஏலகிரி மலைப்பாதையில் 3, 4, 5வது கொண்டை ஊசி வளைவுகளில் திடீரென ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் 9வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு சாலையில் விழுந்த நிலையில், அதற்கு கீழுள்ள கொண்டை ஊசி வளைவுகளில் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத பாறைகளை அகற்றினர். அதன் பின்னர் வாகனங்கள் சீராக இயக்கப்பட்டன.
The post இரவு பெய்த கனமழையால் அதிகாலை ஏலகிரி மலைப்பாதை வளைவுகளில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்: நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர் appeared first on Dinakaran.