கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாகி, புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.

The post கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: