×

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

ஜலந்தர்: ஊழல் வழக்கில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ராமன் அரோராவின் ஜலந்தரில் உள்ள வீட்டில் பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மத்திய தொகுதி எம்எல்ஏ ராமன் அரோரா(54). இவர் மீது ஊழல் பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 14 பேர் பாதுகாப்பு அளித்து வந்தனர்.

சமீபத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டது. இதுகுறித்து ராமன் அரோராவிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்றார். ராமன் அரோரா அரசு அதிகாரிகள் மூலம் தொகுதி மக்களுக்கு தவறான அறிவிப்புகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநில லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று ராமன் அரோரா வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை குறித்து ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் நீல் கர்க்கிடம் போது ராமன் அரோரா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்தினார்.பஞ்சாப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Bribery ,Aam Atmi ,MLA ,Punjab ,Jalandhar ,Bribery Department ,AM Aadmi Party ,MLA Raman Arora ,Punjab State Jalandhar Central Constituency ,Raman Arora ,Aadmi MLA ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...