கோயில்கள் பாதுகாப்பு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த 75 உத்தரவுகளில் எத்தனை அமல்படுத்தப்பட்டுள்ளன என இது சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. கோயில் சிலைகளை பாதுகாக்க அறைகள் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகள் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்களை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உத்தரவு பிறப்பித்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் 25 ரூம்கள் மட்டும்தான் கட்டப்பட்டுள்ளதா?. பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசு இதற்கு ஏன் முக்கியத்துவம் வழங்கவில்லை என கருத்து தெரிவித்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள், விளக்கமளிக்க அறநிலையத்துறை உத்தரவிட்டனர்.

The post கோயில்கள் பாதுகாப்பு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: