×

பெருந்துறையில் இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம்

*வாலிபர் கைது

ஈரோடு : பெருந்துறையில் இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் அங்கு திடீரென சென்று சோதனை நடத்தினர்.

இதில், அங்கு 3 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இளம்பெண்களை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவு தேர்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் பாலமுருகன் (25), என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அங்கு இருந்த 22 வயது, 24 வயது, 27 வயதுடைய 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.

The post பெருந்துறையில் இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Dorudura ,Balaji, Perudura Vaykalmedu, ,Erode district ,Perudura ,
× RELATED மண் கடத்தல்; தொழிலாளி பலி தவெக நிர்வாகி அதிரடி கைது