×

ஆடைகளை கழற்றிவிட்டு ஆட சொன்ன இயக்குனர்: தனுஸ்ரீ தத்தா பகீர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழில் விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் நடித்தவர், தனுஸ்ரீ தத்தா (41). இந்தியில் ‘ஆஷிக் பனாயா ஆப்னே’, ‘பாகம் பாக்’, ‘ரிஸ்க்’, ‘குட் பாய் பேட் பாய்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ‘வீரபத்ரா’ என்ற படத்தில் மட்டும் நடித்தார். நடிப்பை தாண்டி தனது வெளிப்படையான கருத்துகளை பேசுவதன் மூலம் பலத்த சர்ச்சையில் சிக்குவது அவரது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மீ டு’ புகாரில், பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

பிறகு இருவரும் மாறி, மாறி வழக்கு தொடுத்தனர். சில மாதங்களுக்கு முன்பு தனுஸ்ரீ தத்தா, தனது சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் கதறியழுது பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், தனது சொந்த வீட்டிலேயே தான் துன்புறுத்தப்படுவதாகவும், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா அளித்த பேட்டியில், ஒரு இயக்குனர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘படப்பிடிப்பு ஒன்றில் இயக்குனர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். படப்பிடிப்பின் போது, ‘உங்கள் ஆடைகளை கழற்றிவிட்டு நடனம் ஆடுங்கள்’ என்று அந்த இயக்குனர் என்னிடம் சொன்னார். அப்போது நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அங்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் அந்த இயக்குனரின் பேச்சால் அதிருப்தி அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் எனக்கு ஆதரவாக இருந்ததால், அந்த இயக்குனர் பிறகு என்னிடம் அப்படி பேசவில்லை. அமைதியாகி விட்டார்’ என்றார். ஆனால் அந்த இயக்குனர் யார், எந்த மொழி படப்பிடிப்பு என்பது குறித்து அவர் சொல்லவில்லை.

Tags : Tanushree Dutta ,Bagir ,Chennai ,Vishal ,
× RELATED கணவன் கொலை வழக்கில் போலீசில் சரண்;...