இது குறித்து காலத்தில் தலையிட்டு தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் பல் இழந்த பரிதாப நிலைக்கு சென்று விட்டது. இந்தச் சூழலில் ஒடிஷா மக்களிடம் பேசி பிரதமர் ஆன்மீக நம்பிக்கையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டி, தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில், நம்பிக்கையுடனும் பெரும் எதிர்பார்ப்பிலும் தேடி வரும் தொலைந்து போன பூரி ஜெகநாதர் ஆலயத்தின் கருவூலச் சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக பேசி, தமிழ்நாடு மக்கள் மீது தீரா பழி சுமத்தும் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும் என எச்சரிக்கிறது. “ யாகாவா ராயினும் நாகாக்க “… – குறள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டு மக்கள் மீது தீரா பழி சுமத்துவதா?.. பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.