×

விலை எகிறிய நிலையில் மழையால் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி

திருமலை : நாடு முழுவதும் தக்காளி விலை உச்சத்தை தொட்டு விலை எகிறிய நிலையில், தெலங்கானாவில் மழையால் சேதமான தக்காளி குப்பையில் கொட்டப்பட்டது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் வரத்து சந்தையில் குறைந்ததால் அதன் மதிப்பு கிலோ ₹100க்கு மேல் தாண்டி உள்ளது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகளில் பலர் சில வாரங்களில் கோடீஸ்வரர்களாக மாறிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தாங்கள் விளைவித்த தக்காளி பயிரின் மூலம் பல லட்சம் சம்பாதிக்கலாம் என விவசாயிகள் ஆசையாக இருந்தனர். ஆனால் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக தக்காளிகள் சேதம் அடைந்துள்ளது. சில நாட்களாக சந்தைக்கு வரும் தக்காளி வரத்தும் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்து வரக்கூடிய நிலையில், மழையால் சேதம் அடைந்த தக்காளிகளை கால்நடைகளுக்கு உணவாக அளிக்க குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சமீபமாக தக்காளி விலை குறித்த மீம்ஸ்கள் வைரலான நிலையில், தற்போது குப்பையில் தக்காளி கொட்டப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

The post விலை எகிறிய நிலையில் மழையால் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Telangana ,
× RELATED கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால்...